தங்கையுடன் கள்ளக்காதல்... கண்டித்த சகோதரி மீது ஆசிட் வீசிய நபர்...!

ஆசிட் வீசிய லோகேஷ் ராமின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Web Desk | news18
Updated: August 2, 2019, 9:35 AM IST
தங்கையுடன் கள்ளக்காதல்... கண்டித்த சகோதரி மீது ஆசிட் வீசிய நபர்...!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 2, 2019, 9:35 AM IST
சென்னை ஆதம்பாக்கத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் மீது ஆசிட் வீசிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆதம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் பழக்கடை வைத்திருக்கும் விவேகானந்தன் என்பவரின் மனைவி மோகனப் பிரியாவிற்கு, ஜெயந்தி என்ற சகோதரி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ராம் என்பவருடன் ஜெயந்திக்கு கள்ளக்காதல் இருந்துவந்ததை அறிந்த அவரது சகோதரி அதை கண்டித்துள்ளார்.

இதனால், ஜெயந்தி தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த லோகேஷ் ராம், பழக்கடைக்கு வந்து மோகனப்பிரியா மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்த அப்பகுதி மக்கள், மருத்துவமனைக்கு அனுப்பினர்.


அதன்பின்னர் அந்த மக்கள் லோகேஷ் ராமை பிடித்து தாக்குதல் நடத்தி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் மோகனா பிரியாவிடம் புகார் பெற்று கொண்டனர். புகாரின் அடிப்படையில் லோகேஷ் ராமின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க... மனைவியிடம் மன்னிப்பு கேட்ட டம்மி ரவுடி..!


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...