பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி மூடல்...!

பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி மூடல்...!
தாக்கப்பட்ட சுங்கச்சாவடி
  • News18
  • Last Updated: January 27, 2020, 10:27 AM IST
  • Share this:
பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இரண்டாவது நாளாக கட்டணம் ஏதுமின்றி வாகனங்கள் செல்கின்றன.

செங்கல்பட்டு அருகே நேற்று சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் கட்டணம் வசூலிக்கப்படும் சாதனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், ஒரு வாரக்காலத்திற்கு கட்டணம் வசூலிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடிக்கு கோயம்பேட்டில் இருந்த திருச்சி செல்வதற்காக இளங்கோவன் என்பவர் அரசு விரைவு பேருந்தை இயக்கி வந்துள்ளார். அப்போது,கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.


இதனால், ஆத்திரம் அடைந்த அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். அங்குள்ள கணினி மற்றும் சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. இதனையொட்டி, சேதம் அடைந்த பொருட்கள் சரிசெய்யப்படாமல் உள்ளதால் சுங்கச்கட்டணம் வசூலிப்பது தடைபட்டுள்ளது.

ஒருவார காலத்திற்கு கட்டணம் வசூலிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கட்டணம் எதுவும் இன்றி வாகனங்கள் செல்கின்றன.
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்