சென்னையில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. தூர்வாரப்படாமல் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியால் எழுந்துள்ள அச்சம்..

செம்பரம்பாக்கம் ஏரி

தமிழகத்தில் தீபாவளி நாளான 14-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிகள், நீர்நிலைகளை முறையாக கண்காணிக்க மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 • Share this:
  சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்து கிடப்பதால் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, தற்போது இரண்டரை டிஎம்சி நீர் உள்ளது. ஆனால் ஏரி முறையாக தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஏரியில் நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  செம்பரம்பாக்கம் ஏரியை ஒரு மீட்டர் ஆளவிற்கு ஆழப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கினாலும் அந்த பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 13 முதல் 18ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி நாளான 14-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிகள், நீர்நிலைகளை முறையாக கண்காணிக்க மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
  Published by:Gunavathy
  First published: