தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

கோப்புப் படம்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • Share this:
    அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    மேலும் படிக்க... மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக பத்திரிகைத்துறை விளங்குகிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


    உள் மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கிண்டி, வடபழனி, கே.கே.நகர், சேப்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் பகுதியில் அதிகாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. பலத்த சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக துபாய்க்கு செல்வதற்காக தயாரான சிறப்பு விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஏற்கனவே முன்கூட்டியே விமான நிலையம் வந்த பயணிகள், விமானம் தாமதத்தால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஹாங்காங்கிற்கு செல்ல வேண்டிய லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் சரக்கு விமானமும் மழையால் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.
    Published by:Vaijayanthi S
    First published: