உன் பொண்ணுக்கு நேரம் சரியில்லை.. மாந்தரீகம் செய்வதாக கூறி நகைகளுடன் கம்பி நீட்டிய ஆசாமி

சென்னை நகை திருட்டு

கண் இமைக்கும் நேரத்தில் மயக்க மருந்து தெளித்து நகைகளை பறித்து சென்று நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  சென்னையில் மாந்தரீகம் செய்வதாக கூறி , கண் இமைக்கும் நேரத்தில் மயக்க மருந்து தெளித்து நகைகளை பறித்து சென்ற மர்ம ஆசாமி.

  சென்னை புளியந்தோப்பு நேரு நகர் 4 வது தெருவைச் சேர்ந்தவர் தௌலத் (46). இவர் வீட்டிலேயே டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வீட்டு வாசலில் 50 வயதுமிக்க ஒருவர் இஸ்லாமிய முறைப்படி மாந்திரீகம் செய்த படி மேளம் அடித்து கொண்டு  வந்துள்ளார்.

  Also Read: ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1500 கிலோ ஆவின் ஸ்வீட் பார்சல்.. ஆதாரம் இருக்கு - அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

  அப்போது வீட்டில் இருந்த சிறுமி வெளியே வந்து அந்த நபருக்கு 10 ரூபாய் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமி தலையில் கை வைத்த அந்த மர்ம நபர் சிறுமிக்கு நேரம் சரியில்லை எனக் கூறி தெளலத்திடம் பேச்சு கொடுத்துள்ளார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அந்த நபரிடம் தௌலத் கேட்டுள்ளார். உடனடியாக அந்த நபர் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தௌலத் , வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்ததும் , அதில் மயக்க மருந்து கலந்து தௌலத் மற்றும் இவரது மகள் மீது தெளித்ததால் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

  Also Read: நடிகை கொடுத்த பாலியல் புகார்.. சென்னை டூ மதுரை.. மாஜி அமைச்சர் மணிகண்டனிடம் தொடரும் விசாரணை

  கண் இமைக்கும் நேரத்தில் மயக்க மருந்து தெளித்து சிறுமி அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளான் அந்த ஆசாமி அதைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த இருவரும் சகஜ நிலைக்கு வந்ததும் சிறுமி அணிந்திருந்த செயின், வளையல் உள்ளிட்ட 6 சவரன் நகைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: அசோக் குமார்


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: