கொலைபயத்திலும் இவ்வளவு சாந்தமா? - கத்தியை காட்டி வழிப்பறி.. அனைத்தையும் இழந்தபிறகும் அசராமல் புகைபிடித்த இளைஞர் (வீடியோ)
வழிப்பறியில் ஈடுபட்டவர்களிடமும் பதற்றமில்லை, பறிகொடுத்தவரிடமும் எந்த பதற்றமும் இல்லை. கொள்ளையர்களை எதிர்பார்த்து காத்திருந்ததுபோல் பணம், நகையை இளைஞர் கொடுத்துவிட்டு சென்றது ஏன்?
- News18 Tamil
- Last Updated: October 8, 2020, 10:23 AM IST
சென்னை புறநகர் பகுதியான போரூர் - குன்றத்தூர் சாலையில் உள்ளது மதனந்தபுரம். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சாலை ஓரம் இளைஞர் ஒருவர் அங்கும், இங்கும் நடந்து சென்றபடி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வழியாக ஹோண்டா டியோ பைக்கில் வந்த 2 இளைஞர்கள், வாகனத்தை நிறுத்தினர். ஒருவர் இறங்கி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இளைஞரிடம் சென்றனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி பணம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த செயினைக் கேட்டு மிரட்டினர். செய்வதறியாது திகைத்தவர், மிரட்டல் இளைஞர் கேட்டபடி பணம், நகையை கொடுத்துள்ளார். நகை, செல்போன், பணம் ஆகியவற்றை கொடுத்த பிறகும் கன்னத்தில் ஒரு அறை அறைந்துவிட்டு வழிப்பறி நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
நகை, பணம், செல்போன் பறிபோன பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், கீழே போட்ட சிகரெட்டை மீண்டும் எடுத்து புகைத்துக்கொண்டே மீண்டும் நடக்க ஆரம்பித்த காட்சியும் அந்த சிசிடிவி கேமராகவில் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க.. முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு - ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்குச் சென்று நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
அப்படி போரூர் காவல் நிலையம் வரை நடந்து சென்று, வழிப்பறி குறித்து அந்த நபர் சாவகாசமாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போரூர் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.