ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் 100 நாட்களுக்கு மேலாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தக் குறிப்பிட்ட காலத்தைப் பயன்படுத்தி ரயில் நிலையத்தில் உள்ள சீரமைக்கும் பணிகளை தற்பொழுது தெற்கு ரயில்வே செய்து வருகிறது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சீரமைக்கக் கூடிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிளாட்பார்ம் டைல்ஸ் ஒட்டக்கூடிய பணிகள், புதிய இருக்கைகள் சீரமைத்தல் மற்றும் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ரயில்களை இயக்குவதற்கு முன்னதாகவே ரயில் நிலையத்திற்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்.

Also see:

இதேபோல சென்னை தீவுத் திடல் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் வண்ணம் தீட்ட கூடிய பணியும் நடைபெற்று வருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் பராமரிப்பு மற்றும் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது.

Published by:Rizwan
First published:

Tags: Chennai, Southern railway