ஒரே ஒரு எழுத்தில் பறிபோனது சென்னை ரயில் நிலையத்தின் உலக சாதனை!

ஆங்கிலத்தில் இப்பெயர் ’Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station’ 57 எழுத்துகள் கொண்ட பெயராக உள்ளது.

Web Desk | news18
Updated: April 15, 2019, 2:07 PM IST
ஒரே ஒரு எழுத்தில் பறிபோனது சென்னை ரயில் நிலையத்தின் உலக சாதனை!
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்
Web Desk | news18
Updated: April 15, 2019, 2:07 PM IST
உலகின் மிகவும் நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற சாதனையை ஒரே ஒரு எழுத்தில் தவறவிட்டுள்ளது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் இப்பெயர் ’Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station’ 57 எழுத்துகள் கொண்ட பெயராக உள்ளது.

இதனால், உலகிலேயே மிகவும் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற உலக சாதனைப் படைப்பதை ஒரே ஒரு எழுத்தில் சென்னை ரயில் நிலையம் தவறவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் நாட்டில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch'. இந்தப் பெயரில் மொத்தம் 58 எழுத்துகள் உள்ளன.

இதனால், வேல்ஸ் நாட்டு ரயில் நிலையத்தின் உலக சாதனையை ஒரே ஒரு எழுத்தில் சென்னை ரயில் நிலையத்தால் சமன் செய்ய முடியாது போனது.

இதுபோக இந்தியாவில் கர்நாடகாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் ’க்ரந்திவீரா சங்கோலி ராயன்னா பெங்களூரு சிட்டி’ஆகும். மேலும், ஆந்திராவின் ‘வெங்கடநரசிம்மராஜுவரீபேட்டை’ என்ற ரயில் நிலையத்துக்கும் மஹாராஷ்டிராவில் ‘சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ்’ என்ற ரயில் நிலையத்துக்கும் பெரிய பெயர்கள் உள்ளன.

மேலும் பார்க்க: சீமானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்... என்ன பிரச்னை...?

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...