• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்..

கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்..

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி சென்றனர்.

  • Share this:
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் என்பவர் புதுச்சேரியில் சரணடைந்தார்.

செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகர் நியூபோக் சாலையில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர்.

Also read: ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு எடுத்துவரப்பட்ட ரூ.1.80 கோடி - பிடிபட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை

அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் தலைமையில்  அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு காவலரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: