அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக ரஜினி கூறினார்...! இஸ்லாமிய மதகுருக்கள் பேட்டி

அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக ரஜினி கூறினார்...! இஸ்லாமிய மதகுருக்கள் பேட்டி
ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: March 1, 2020, 12:57 PM IST
  • Share this:
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மதகுருக்கள், நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கடந்த ஐந்தாம் தேதி ரஜினிகாந்த் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த நிலையில் அதற்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வருத்தத்தை தெரிவித்து தேவை ஏற்பட்டால் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர தயாராக இருப்பதாக அறிக்கையை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். மேலும், தன்னை நேரில் வந்து சந்திக்க ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார்.


இந்த நிலையில், இன்று போயஸ்கார்டனில் 5 மதகுருக்கள் ரஜினிகாந்தை சந்தித்து குடியுரிமை சட்டத் திருத்த பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, Dr. V.S. அன்வர் பாதுஷாஹ்,  S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, A.அப்துல் அஜீஸ் பாகவி, K.M. இல்யாஸ் ரியாஜி ஆகிய 5 பேரும் ரஜினிகாந்திடம் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து பேசினர்.



இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், சிஏஏ எதிர்ப்பு குறித்து ரஜினிகாந்த் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம். அவர் புரிந்துகொண்டார். நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என அவர் எங்களிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று ஹஜ் கமிட்டி தலைவர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading