சென்னை : ஹவாலா பண பிரச்னையால் கடத்தப்பட்ட தொழிலதிபர்... முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை

சென்னை : ஹவாலா பண பிரச்னையால் கடத்தப்பட்ட தொழிலதிபர்... முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை
கடத்தப்பட்ட தொழிலதிபர்
  • Share this:
சென்னை ஏழுகிணறு போர்த்துகீஸ் பகுதியை சேர்ந்தவர் திவான்(எ) அக்பர். தொழிலதிபரான இவர் மண்ணடியில் பிரிண்டிங் நிறுவனம் நடத்திக்கொண்டும், ஆடை மொத்த வியாபாரம் மற்றும் பர்மா பஜார் எலக்ட்ரானிக்ஸ் கடைகளுக்கு மொத்த பொருள் விற்பனையாளராக இருந்து வருகிறார்.

கடந்த 16ம் தேதி முத்தையால்பேட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று மது பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு தனது வீட்டுக்கு செல்வதற்காக முத்தையால்பேட்டை அம்மன் கோவில் தெரு வழியாக நடந்து வந்த போது, ஹையாத் திருமண வாசலில் வைத்து, காரில் வந்த 5 மர்ம நபர்கள் அவரை கடத்தியுள்ளனர். முத்தையால்பேட்டையிலிருந்து ஈ.சி.ஆர் வரைக்கும் 3 கார்களில் மாற்றி மாற்றி அக்பரின்  கண்களை கட்டி அவரை கடத்தியுள்ளனர்.

ஈ.சி.ஆர் சாலையில் உள்ள, மர்ம கும்பலுக்கு பழக்கமான தனியார் ரிசார்ட்டில் திவான் (எ) அக்பரை கட்டிப்போட்டு மிரட்டியுள்ளனர். 17ம் தேதி மற்றும் 18ம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் அக்பரை அடித்து துன்புறுத்தி இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். மேலும் அக்பரின் தம்பியான அமீனுக்கு கால் செய்து 5 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே அக்பரை உயிரோடு விடுவதாக கூறியுள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ. 2 கோடி கொடுத்தால் போதும் என சொல்லியுள்ளனர்.


இதனால் அக்பரின் தம்பி அமீன் ரூபாய் 2 கோடியை எடுத்துக்கொண்டு ஈ.சி.ஆரில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு சென்று மர்ம நபர்களிடம் பணத்தை கொடுத்து தனது அண்ணனான அக்பரை மீட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் 24ம் தேதி திவான் (எ) அக்பர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் தன்னை கடத்தி வைத்துக் கொண்டு ரூபாய் 2 கோடி ரூபாய் மர்மநபர்கள் பறித்து விட்டதாக புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள்  அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடத்தலில் ஈடுப்பட்ட தி.நகரை சேர்ந்த உமா மகேஸ்வரன், அரியலூரை சேர்ந்த ஆல்பர்ட், மண்ணடியை சேர்ந்த அஹம்மது உட்பட 4 பேரை முத்தையால்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கடத்தலுக்கு முக்கியப்புள்ளியான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தவ்பீக் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர். மேலும் அக்பரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட ரூபாய் 2 கோடியானது ஹவாலா பணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஹவாலா பண பரிவர்த்தனையில் அக்பர் மற்றும் தவ்பிக் ஆகிய இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சியாகவே அக்பர் கடத்தப்பட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் புகார்தாரரான அக்பரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேடப்படும் தவ்பிக் "இறைவன் ஒருவனே" என்ற அமைப்பை உருவாக்கி அதில் இளைஞர்களை சேர்த்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தி வந்ததாக கடந்த ஆண்டு மண்ணடியில் உள்ள அவரது அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர் இதனடிப்படையில் தவ்பிக்கை தேடி வந்தனர். மேலும் நாம் மனிதர் என்ற கட்சியை தவ்பிக் நடத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 தனிப்படை போலீசார் தவ்பிக்கை தேடி வரும் அதே வேளையில் இவர் பயங்கரவாத செயலுக்கு திட்டம் தீட்டி வந்ததால், கியூ பிரான்ச் போலீசாரும் தவ்பிக்கை பிடிப்பதற்காக தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading