சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!

10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Web Desk | news18
Updated: August 1, 2019, 11:31 AM IST
சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!
பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து
Web Desk | news18
Updated: August 1, 2019, 11:31 AM IST
சென்னையில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

மண்ணடியில் கிருஷ்ணன் கோவில் தெருவில் 5 மாடி கட்டிடத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து துறைமுகம் பகுதிக்கு பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அலுவலகத்தின் தரை தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேபிள்கள், ஆவணங்களில் தீ பற்றியதால் மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியே புகை மூட்டம் சூழ்ந்தது.


தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து வருகிறது.

தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகின. மேலும், இந்த தீ விபத்து காரணமாக துறைமுகம் பகுதியில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...  திட்டமிட்ட படுகொலை... கட்டம் கட்டிய போலீஸ்...

Loading...






அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...