காதலியுடன் பிரச்னை... விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி குழப்பம் ஏற்படுத்திய சென்னை இளைஞர் கைது

news18
Updated: July 6, 2019, 3:20 PM IST
காதலியுடன் பிரச்னை... விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி குழப்பம் ஏற்படுத்திய சென்னை இளைஞர் கைது
விஸ்வநாதன்
news18
Updated: July 6, 2019, 3:20 PM IST
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற இளைஞர் ஹைதராபாத் விமான நிலையத்தில், 2 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கூறி குழப்பம் ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இண்டிகோ மற்றூம் ட்ரூஜெட் ஆகிய இரு விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தகவல் வந்துள்ளது.

இதனை அடுத்து, பாதுகாப்புப்படையினர் இரு விமானங்களையும் சோதனையிட்டு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். இதனால், சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போலி அழைப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற இளைஞர் சிக்கியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையச் சேர்ந்தவர் விஸ்வநாதன். விற்பனை பிரதிநிதியாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சென்னை செல்வதற்காக இன்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

காதலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மது போதையில் இருந்த விஸ்வநாதன், வெடிகுண்டுகள் இருப்பதாக தொலைபேசி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விசாரணைக்குப் பின்னர் விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...