சென்னை புத்தகக் கண்காட்சி: ஜெயரஞ்சனின் 2 நூல்கள் வெளியீடு

ஜெயரஞ்சனின் தமிழ்நாட்டின் மணற்கொள்ளை அரசியல் நூல் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Web Desk | news18
Updated: January 13, 2019, 10:19 AM IST
சென்னை புத்தகக் கண்காட்சி: ஜெயரஞ்சனின் 2 நூல்கள் வெளியீடு
சென்னை புத்தக கண்காட்சி
Web Desk | news18
Updated: January 13, 2019, 10:19 AM IST
சென்னை 42-வது புத்தக் கண்காட்சியில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் புத்தகங்களின் வரிசையில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் எழுதிய 2 புத்தகங்கள் குறித்தும், அந்த புத்தகங்களின் பேசுப்பொருள் குறித்தும் பார்க்கலாம்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த பிரதான பிரச்னைகளில் ஒன்று மணல் கொள்ளை. ஆட்சிகள் மாறினாலும், மணல் போன்ற இயற்கை வளங்களை சுரண்டும் காட்சிகள் மட்டும் மாறுவதில்லை. இதேபோல், இந்திய அளவில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றிற்கு பின்பான இந்திய பொருளாதாரம் பல மாற்றங்களை கண்டுள்ளது. நலிவடைந்த சிறு, குறு தொழில்கள், மாநிலங்களுக்கான நிதி வருவாய் குறைவு போன்றவற்றை கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு கண்டது.

கோப்புப் படம்


இந்த விவகாரங்களை பிரதானப்படுத்தி.  பொருளாதார அறிஞரும், எழுத்தாளருமான ஜெயரஞ்சன் எழுதியுள்ள இரண்டு புத்தகங்கள் சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் - 2018 என்ற அவருடைய புத்தகத்தில் கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள், புதிய வரி விதிப்பு முறைகளால் மாநிலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த தெளிவான விளக்கங்கள் அமைந்துள்ளன.

ஜெயரஞ்சனின் மற்றொரு புத்தகம் தமிழ்நாட்டின் மணற்கொள்ளை அரசியல் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 1980களில் மாட்டு வண்டிகளில் போக்குரத்து மற்றும் கூலி மட்டுமே செலுத்தி இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த மணல் வியாபாரம் தொடங்கி லாபகரமான தொழிலாக மாறியது எப்படி என்பதை ஆழமாக பேசுவதுடன், இதன் பின்னால் உள்ள 30 ஆண்டுகால அரசியல் காரணிகளையும் தெளிவுப்படுத்துகிறது.புலம் பெயர்பவர்களின் அதிகரிக்கும் வாழ்விடத்தேவையும், அதற்கான கட்டுமான பொருட்களின் தேவையும் மணல் கொள்ளைக்கு முக்கிய காரணமாக இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது.
Loading...
Also Read..புத்தகப் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்த சென்னை புத்தகக் கண்காட்சி....

சென்னை புத்தகக் கண்காட்சியில் வரவேற்பை பெற்ற புத்தகம் எது தெரியுமா?
First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...