போகி பண்டிகை: சென்னையில் கடும் புகைமூட்டம் - காற்றின் தரம் மோசமானது

போகி பண்டிகை: சென்னையில் கடும் புகைமூட்டம் - காற்றின் தரம் மோசமானது
  • Share this:
போகிப் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிந்தபிறகும் புகைமூட்டமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டிச் சென்றனர். புகை மற்றும் பனிமூட்டத்தால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல், சென்னையில் இரவு முழுவதும் போகி கொண்டாடப்பட்டதால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. போகியின்போது எரிக்கப்பட்ட பொருட்களால் காற்று மாசுபாடு அடைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி மணலியில் காற்று தரக் குறியீடு 932, கொடுங்கையூரில் 1118, அண்ணா நகரில் 1118- ஆக உள்ளது. ராமாபுரத்தில் 568, ஆழ்வார்பேட்டையில் 326, ஆலந்தூரில் 340 ஆகவும் காற்றின் தரக்குறியீடு இருந்தது.

காற்று தரக் குறியீடு 100க்கு மேல் இருந்தால் அது சுவாசிக்க தகுதியற்ற நிலையில் மாசுபட்டிருப்பதாக அர்த்தமாகும்.
First published: January 14, 2020, 8:48 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading