600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்ற சென்னை சாப்ட்வேர் எஞ்சினியர் கைது!

”நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியீடுவேன் என்றுகூறி அவர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, ஆடைகளைக் கழற்றுமாறு மிரட்டி அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.”

Web Desk | news18
Updated: August 24, 2019, 4:43 PM IST
600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்ற சென்னை சாப்ட்வேர் எஞ்சினியர் கைது!
கைதான ராஜ் செழியன்
Web Desk | news18
Updated: August 24, 2019, 4:43 PM IST
சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர், சுமார் 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் கடந்த ஏப்ரல் மாதம், தனக்கு வேலை தருவதாகக் கூறி பேசி மயக்கி நிர்வாணப் புகைப்படங்களை பெற்றதாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் மீது போலீசில் புகாரளித்தார்.

5 மாத தீவிர தேடுதல் மற்றும் விசாரணைக்குப் பின்னர் சென்னையைச் சேர்ந்த 33 வயதான சாப்ட்வேர் எஞ்சினியர் க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப். திருமணமான இவரின் மனைவியும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவிக்கு பகல் நேரத்தில் வேலை, செழியனுக்கு இரவு நேரத்தில் வேலை. இதனால், பகல் நேரத்தில் பொழுதுபோகாததால், செழியன் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை போலியாக நடத்தி வந்துள்ளார்.

பிரபல நிறுவனம் ஒன்றின் ரிசப்ஷனிஸ்ட் ஆக பணியாற்ற பெண்கள் தேவை என்று தனது நிறுவனம் மூலம் செழியன் விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி நாடு முழுவதிலும் இருந்து பல பெண்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களின் போன் நம்பரைப் பெற்று பிரதீப் என்ற பெயரில் செழியன், நேர்காணல் செய்துள்ளார்.

பின்னர், அவர்களிடம் நிறுவனத்தின் பெண் எச்.ஆர் தங்களிடம் பேசுவார் என்று கூறி, வேலை உறுதியாகக் கிடைக்கும் ஆனால் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று நம்பிக்கை தரும் விதமாக செழியன் பேசியுள்ளார். இதனை, அந்தப் பெண்களும் உறுதியாக நம்பியுள்ளனர்.

Loading...

பின்னர், அந்தப் பெண்களை தொடர்புகொண்டு நைசாக பேசி மயக்கி, வேலை உறுதியாக கிடைக்கும் நல்ல சம்பளம் என்று வார்த்தைகளில் தேனொழுகப் பேசி, அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுள்ளார். செழியனின் பேச்சில் மயங்கிய பெண்களும் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.

அடுத்தகட்டமாக நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியீடுவேன் என்றுகூறி அவர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, ஆடைகளைக் கழற்றுமாறு மிரட்டி அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அப்படியே அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்துள்ளார்.

ஒன்றல்ல.. இரண்டல்ல... 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்களை இவ்வாறு செழியன் பேசி ஏமாற்றி நிர்வாணப்புகைப்படங்களைப் பெற்றுள்ளார்.

செழியனிடம் சிக்கிய பெண்களில் 60 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சிலரே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தமிழக பெண்களை செழியன் பெரும்பாலும் தேர்வு செய்யவில்லை. ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது.

கடந்த ஓராண்டாக இந்த மோசடி செயலில் ஈடுபட்டுவந்து தற்போது சிக்கிய செழியனிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். செல்போன்களை தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், செழியனிடம் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

டீன் ஏஜ் பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சமூக வலைதளங்கள்!மேலும் படிக்க... 

மேலும் படிக்க : 600 பெண்களின் ஆடையை அவிழ்த்து ரசித்த ஐ.டி. ஊழியர் கைது… எப்படி செய்தார் இந்த கொடூர செயலை?

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...