Home /News /tamil-nadu /

சென்னை வங்கிக் கொள்ளை - 9 இடங்களில் 31.7 கிலோ தங்கநகைகள் மீட்பு.. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

சென்னை வங்கிக் கொள்ளை - 9 இடங்களில் 31.7 கிலோ தங்கநகைகள் மீட்பு.. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

சென்னை வங்கி கொள்ளை

சென்னை வங்கி கொள்ளை

Chennai bank Robbery: சென்னை வங்கி கொள்ளை தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை ஃபெட் வங்கி கொள்ளை தொடர்பாக 9 இடங்களில் இருந்து மொத்தம் 31 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில், கடந்த 13-ம் தேதி ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், மொத்தம் 481 வாடிக்கையாளர்களின், 31 கிலோ 700 கிராம் தங்க நகைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் 9 இடங்களில் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.அதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தோஷ் என்பவரிடம் இருந்து 15 கிலோ 951 கிராம் தங்கமும்,ஜெய் நகர் பார்க் பகுதியில் சூர்ய பிரகாஷிடம் 8 கிலோ 827 கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அத்துடன், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜிடம் இருந்து 3 கிலோ 590 கிராம் தங்க நகைகளும்,குரோம்பேட்டையில் உள்ள சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து 2 கிலோ 656 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டன.மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாலாஜியிடம் 63 கிராமும், செந்திலிடம் 80 கிராமும், முருகனிடம் 373 கிராம் தங்க நகைகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.அத்துடன், பாலாஜியின் வில்லிவாக்கம் வீட்டில் 100 கிராம் தங்கமும்,கோவையில் ஸ்ரீவஸ்தவா என்பவரிடம் இருந்து 63 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Also Read: இரண்டு தனியார் பேருந்துகளின் போட்டிக்கிடையே விபத்தில் சிக்கிய தந்தை-மகன் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

    இது தொடர்பாக அரும்பாக்கம் காவல்நிலையத்தில், சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர் சந்தித்தார், அப்போது, ஃபெட் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டதாக கூறினார். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரிந்தும் அதை மறைத்த குற்றத்திற்காக காவல் ஆய்வாளர் அமல்ராஜ், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.



    ஃபெட் வங்கி கொள்ளையில், அதன் ஊழியரே ஈடுபட்டுள்ளதால், ஒவ்வொரு வங்கியும் தங்களது ஊழியர்களின் பின்புலத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அன்பு தெரிவித்தார். மேலும், நகைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியதாகவும் கூறினார்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai Police, Crime News, Gold Theft

    அடுத்த செய்தி