ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடிசை வீடு தீயில் நாசம்... கண்ணீருடன் நின்ற ஆட்டோ ஓட்டுநருக்கு உதவிய ஆவடி போலீசார்...!

குடிசை வீடு தீயில் நாசம்... கண்ணீருடன் நின்ற ஆட்டோ ஓட்டுநருக்கு உதவிய ஆவடி போலீசார்...!

News18

News18

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  குடிசை வீடு தீயில் எரிந்து நிற்கதியாக நின்ற ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கு ஆவடி போலீசார் அரிசி, காய்கறிகள் வழங்கி உதவியுள்ளனர்.

  சென்னை ஆவடி, கோனாம்பேடு, அண்ணா தெருவில் உள்ள குடிசை வீட்டில் வசிப்பவர் ராஜ், 39; ஆட்டோ ஓட்டுனரான இவர் காணும் பொங்கலை முன்னிட்டு குடும்பத்தினருடன் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று மதியம் 2:30 மணி அளவில் வீட்டிலிருந்து சென்றார்.

  திடீரென அவரது வீட்டிற்கு அருகே வசிப்பவர் 3:00 மணி அளவில் வீடு தீப்பிடித்து எரிவதாக மொபைல் போனில் தெரிவித்துள்ளார். இதனால் ராஜ் கோவிலுக்கு செல்லாமல் பாதி வழியிலேயே வீட்டிற்கு திரும்பினார். அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

  இந்த தீவிபத்தில் டி.வி., மின்விசிறி, ஆடைகள் உள்பட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உணவுப் பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி போலீசார் அரிசி, காய்கறிகள் மற்றும் ஆடைகள் வழங்கி ஆறுதல் கூறினர்.

  போலீசாரின் இச்செயலைப் பார்த்து பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்தினருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நலச்சங்கத்தினர் உதவ முன்வந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் மின் கசிவினால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது.

  Published by:Sankar
  First published:

  Tags: Chennai, Chennai Police