தனது மொபைல் போனை விற்று மது விருந்து கொடுத்ததால் ஆத்திரத்தில் நண்பரைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்

தனது மொபைல் போனை விற்று மது விருந்து கொடுத்ததால் ஆத்திரத்தில் நண்பரைக் கொலை செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ்.

தனது மொபைல் போனை விற்று மது விருந்து கொடுத்ததால் ஆத்திரத்தில் நண்பரைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்
கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ்.
  • Share this:
சென்னை தி.நகர் எம்.ஆர் சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு ரோகிணி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தனசேகரன் தினமும் குடித்துவிட்டு மனைவி  ரோகிணியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனைவி தனது மகன்களுடன் வளசரவாக்கத்திலுள்ள தன் தாய் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனசேகரன் அசோக் நகர் 7வது அவென்யூவில் தனது நண்பர் விக்டர் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அங்கே தூங்கிவிட்டார். மறுநாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது, தனது நண்பர் தனசேகரன் இறந்து கிடந்துள்ளார். ஆனால், மற்றொரு நண்பரான ரமேஷ் அங்கிருந்து மாயமாகியுள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச்ஆஃப் ஆகியிருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த விக்டர், அசோக் நகர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துக் கிடந்த தனசேகரனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உயிரிழந்த தனசேகரனின் கழுத்தில் தூக்கு மாட்டியதற்கான அடையாளம் இருந்ததாலும் இறந்த இடத்தில் அதற்குப் பயன்படுத்திய துணியோ, கயிறோ இல்லை என போலீசார் கூறினர். இதனால் தனசேகரனின் மனைவி ரோகினி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also read: செல்போன் திருடர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்Also read: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான ’டாப் 10’ கார்கள்இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தனசேகரை அளவுக்கதிகமாக மது குடிக்க வைத்து வயர் கொண்டு கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது மொபைல் போனைப் பயன்படுத்திவிட்டு திருப்பித் தருவதாகக் கூறி தனசேகர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அன்று இரவு விக்டர் வீட்டில் மொபைல் போனை திரும்பக் கேட்டபோது அதை விற்ற பணத்தில்தான் நாம் மது குடித்துக் கொண்டிருக்கிறோம் என தனசேகர் நக்கலாகக் கூறியதாகவும் ரமேஷ் கூறியுள்ளார்.

மேலும், இதனால் கோபமடைந்த ரமேஷ் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த தனசேகரை வயர் மூலம் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading