ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் தீப்பற்றி மரணம்.. கொலையா... தற்கொலையா..? என போலீசார் விசாரணை

ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் தீப்பற்றி மரணம்.. கொலையா... தற்கொலையா..? என போலீசார் விசாரணை
  • Share this:
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்துள்ளார். போலீசார் காரணத்தை திசை திருப்புவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) தமிழ்குடிமகன் (34). இவர் சென்னை ராமாபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை தரமணி ஸ்ரீ ராம் நகருக்கு ஆட்டோவில் சென்றுள்ளார் அப்போது அருகில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலுக்கு சென்றவர் சிறிது நேரத்திலேயே உடம்பில் தீப்பற்றி எரிந்த நிலையில் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து ஆட்டோ டிரைவரை ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் பலியானார்.


வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஆட்டோவில் ஊற்றிய போது ஓட்டுநர் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்ததால் அதில் தீப்பொறி பட்டு ஆட்டோ டிரைவர் மீது தீப்பற்றி உள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து ஹோட்டலிலிருந்து உடலில் தீப்பற்றி எரிந்தபடி சாலையில் விழுந்துள்ளார். ஆட்டோவானது பெட்ரோலை ஊற்றி இயக்கக் கூடியது அல்ல; அது கேஸ்(gas) மூலம் இயங்க கூடியது எனவும் உறவினர்களும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனரின் ஊரான மணக்கால் ஊருக்கு அடுத்த ஊரைச் சேர்ந்தவர்தான் அந்த ஹோட்டலை நடத்துபவர். அந்த ஹோட்டல் உரிமையாளருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் என்ன நடந்தது என்று விவரம் தெரிய வேண்டுமெனவும், போலீசார்கள் நடந்த இந்த சம்பவத்தை திட்டமிட்டு திசை மாற்றுவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க: இந்து மதத்தில் சுயமரியாதை இல்லை...! இஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித் மக்கள்

First published: February 13, 2020, 3:27 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading