சென்னையில் சவாரி வந்தவரிடம் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய ஆட்டோ ஓட்டுநர் - மறுத்ததால் தாக்குதல்

சென்னையில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்தவரை தாக்கி அவரது பணம் மற்றும் செல்போனை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் சவாரி வந்தவரிடம் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய ஆட்டோ ஓட்டுநர் - மறுத்ததால் தாக்குதல்
ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தியவர்
  • Share this:
சென்னை அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி நாகராஜ் தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக பேருந்தில் பிராட்வே சென்றுள்ளார்.

பின்னர் ஆட்டோ மூலமாக நாகராஜ்  அண்ணா ஆர்ச் பகுதியில் இறங்கியுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜிடம் அரும்பாக்கம் வழியாக செல்வதாக கூறியதால் ஆட்டோவில் ஏறி உள்ளார்.

படிக்க...சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை


அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே அந்த நபர் ஆட்டோவை விட்டு தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நாகராஜை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் நாகராஜ் மறுத்ததால் அந்த நபர் கத்தியால் தாக்கி கையில் வைத்திருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜ் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.  சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகள் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.

படிக்க...பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை அடித்து நொறுக்கிய பெண்கள்: நாகையில் பரபரப்புவிசாரணையில் அமைந்தகரை கதிரவன் காலனியை சேர்ந்த கொரில்லா என்கிற சார்லஸ் என தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்த ஆட்டோ, பட்டாகத்தி, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading