குளிக்கும் போது இளம் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது!

குளிக்கும் போது இளம் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது!
ஆட்டோ ஓட்டுநர்
  • Share this:
குளிக்கும் போது பெண்களை வீடியோ படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்து வருவதாகவும்,கடந்த 5-ம் தேதி வீட்டில் உள்ள பாத்ரூமில், மூத்த மகள் குளித்துக் கொண்டிருக்கும்போது, பாத்ரூம் ஓட்டை வழியாக யாரோ வீடியோ படம் எடுப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும், உடனடியாக சென்று பார்க்கும் போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத் என்பவர் செல்போனில் படம் பிடித்தது தெரிய வந்துள்ளது.

அந்த இடத்திலிருந்து வினோத் தப்பிச் செல்லும்போது , வினோத்திடமிருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டேன். பின் தனது கணவருடன் சென்று வினோத்திடம் விசாரணை செய்யும்போது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் அனைத்து மகளிர் காவலர்கள் விசாரணை நடத்தியதில், புகார் உண்மை என தெரியவந்துள்ளது. வினோத் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் வினோத்தின் செல்போனை ஆய்வு செய்ததில் பல ஆபாச வீடியோக்களும் குளியலறை வீடியோக்களும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவரான வினோத்தை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் படிக்க: ‘சரக்குக்கு மிக்ஸிங் செய்ய தண்ணி கொடு’ - குடிமகன்களின் தொந்தரவால் பள்ளிக்குச் செல்ல அஞ்சும் மாணவர்கள்
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்