அயன் பட பாணியில் தலைப்பாகையில் வைத்து தங்கம் கடத்தல்! ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

அயன் பட பாணியில் தலைப்பாகையில் வைத்து தங்கம் கடத்தல்! ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்
கடத்தி வரப்பட்ட தங்கம்
  • News18
  • Last Updated: January 23, 2020, 11:34 AM IST
  • Share this:
தாய்லாந்தில் இருந்து தலைப்பாகைக்குள் மறைத்து வைத்துக் கடத்திக் கொண்டு வந்த 1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து புதன்கிழமை அன்று சுப்ரீத் சிங் மற்றும் தமன்ப்ரீத் சிங் என்ற இரண்டு பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

அவர்களை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவர்கள் கட்டியிருந்த டர்பன் எனப்படும் தலைப்பாகைக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.


அவர்களிடம் இருந்து 4 பொட்டலங்களில் ஒரு கிலோ 800 கிராம் எடையுள்ள 74,20,000 ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

அவர்கள் யாருக்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், புதன்கிழமை அன்று மட்டும் சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 5 பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்துது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Also see...
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்