சென்னை ஆடிட்டரை கடத்தி கொடூரமாக கொலை செய்த கும்பல் - மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

மாதிரிப்படம்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை ஆடிட்டரை கடத்திய கும்பல் கிருஷ்ணகிரியில் வைத்து கொலை செய்துள்ளது.

 • Share this:
  சென்னை ஆடிட்டரை கடத்திச் சென்று கிருஷ்ணகிரியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜனரஞ்சன் பிரதாப், 48, ஆடிட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரியும் கிருஷ்ணகுமார் என்பவருடன் கடந்த, 26-ம் தேதி சென்னையிலிருந்து வேலூருக்கு வந்துள்ளார். இவர்களுடன் பணிபுரியும் சபரீஷ் என்பவர் மற்றொரு காரில் வந்துள்ளார். இரவு 10 மணியளவில், ஜனரஞ்சன் பிரதாப் தன் மனைவி பூர்ணிமா பிரதான்,  என்பவருக்கு மொபைல் போனில் பேசியுள்ளார். தான் வேலூருக்கு வந்த வேலை முடிந்துவிட்டதாகவும், மறுநாள் கிருஷ்ணகிரியில் முக்கிய பணி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  இந்நிலையில் கடந்த, 27ல், ஜனரஞ்சன் பிரதாப்புக்கு போன்  செய்த மனைவி அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனதையடுத்து, அவருடன் சென்ற கிருஷ்ணகுமார், சபரீஷ் இருவருக்கும் போன் செய்த போது அவர்கள் சரியான விவரத்தை கூறாததால், சந்தேகமடைந்த பூர்ணிமா பிரதான் கடந்த 28-ம் தேதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஆடிட்டர்  கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

  இதையடுத்து கிருஷ்ணகிரி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி மற்றும் டி.எஸ்.பி.,க்கள் சரவணன், தங்கவேல், கிருத்திகா, அலெக்சாண்டர் உள்ளிட்டோர் ஜனரஞ்சன் பிரதாப் அடித்து கொலை செய்யப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்த கோள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் ஜனரஞ்சன் பிரதானை புதைத்ததாக  கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோர் கூறிய இடத்தில் தாசில்தார் முன்னிலையில் சடலத்தை தோண்டும் பணியில் ஈடுபட முயன்ற போது, அப்பகுதியில் மழை பெய்து வந்ததாலும், இருட்டியதாலும் பணி தாமதமானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும்  ஆடிட்டர் பிரதான் கொலை  வழக்கில் திமுக பிரமுகர் சிக்குகிறார். சென்னை வேளச்சேரி பகுதியைச் சார்ந்த ஆடிட்டர் பிரதான் அவர்களை சென்னை சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயலாளர் லோகு என்பவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கொலை செய்வதாக மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது. ஆடிட்டர் பிரதானை கடத்திச் சென்று கொலை செய்து கிருஷ்ணகிரியில் பகுதியில் புதைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் அவருடைய மனைவி பூர்ணா புகார் அளித்துள்ளார்.

  செய்தியாளர்: ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: