முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாடியில் இருந்து குதித்து மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

மாடியில் இருந்து குதித்து மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

சக மாணவிகளிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசோக் நகர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பிரியா, கே.கே. நகரில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலையில் கல்லூரிக்குச் சென்ற பிரியா, 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவி பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து, சக மாணவிகளிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடி.யில் செவ்வாய்க்கிழமை மாணவர் ஒரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Suicide