பொறுமை இழந்து நலத்திட்ட உதவிகளைப் பெற முந்திய பெண்கள்... பேச்சை முடித்து புறப்பட்ட அமைச்சர்!

பொறுமை இழந்து நலத்திட்ட உதவிகளைப் பெற முந்திய பெண்கள்... பேச்சை முடித்து புறப்பட்ட அமைச்சர்!
செல்லூர் ராஜூ
  • News18 Tamil
  • Last Updated: February 27, 2020, 11:41 AM IST
  • Share this:
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருந்தபோதே பொறுமையிழந்த பெண்கள், நலத் திட்ட உதவிகளை பெற போட்டி போட்டதால் பேச்சைப் பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் புறப்பட்டார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. பழங்காநத்தம் பகுதியில் இதற்காக அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு அரசின் சாதனைகளை விளக்கி பேசிக் கொண்டிருந்தார்.

விழாவில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்குவதற்காக சில்வர் பாத்திரங்கள் மேடை அருகே வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் பொறுமையிழந்த பெண்கள் முண்டியடித்துக்கொண்டு பொருளை வாங்க மேடை அருகே திரண்டனர். இதனால் ஒரே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


தடுப்புகளை மீறி பெண்கள் ஏறி குதித்து முண்டி அடித்ததால் சிலர் காயமடைந்தனர். பேச்சை கேட்காமல் அனைவரும் பொருளை வாங்கத் திரண்டதால் கோபமடைந்த அமைச்சர் செல்லூர் ராஜு, தனது பேச்சை முடித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கி புறப்பட்டார்.

அவரது ஆதரவாளர்களும் அவருடன் புறப்பட்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் பொருட்களை வழங்க முயன்ற பொழுது பெண்கள் முண்டியடித்துக்கொண்டு அவற்றை பறித்து எடுத்துச் சென்றனர்.

இதனால் அந்த பகுதியே களேபரம் போல் காட்சியளித்தது. போலீசார் ஒழுங்குபடுத்த முயற்சித்தும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தள்ளுமுள்ளுவில் மூதாட்டிகள் பலர் காயமடைந்தனர்.Also see...
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading