நவராத்திரி கொலு பொம்மைகளில் இடம்பெறும் கொரோனா, எஸ்.பி.பி... சென்னையில் ஒரே வீட்டில் 6,000 பொம்மைகள்!

இந்தாண்டு நவராத்திரி திருவிழா, தொடங்கி உள்ள நிலையில், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவர். சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த நந்தினி 10-வது ஆண்டாக கொலு வைத்துள்ளார்.

நவராத்திரி கொலு பொம்மைகளில் இடம்பெறும் கொரோனா, எஸ்.பி.பி... சென்னையில் ஒரே வீட்டில் 6,000 பொம்மைகள்!
நவராத்திரி கொலுவில் இடம்பெறும் கொரோனா, எஸ்.பி.பி
  • News18
  • Last Updated: October 17, 2020, 5:35 PM IST
  • Share this:
நவராத்திரி திருவிழா தொடங்கி உள்ள நிலையில், இந்தாண்டு புதிய வரவாக ‘கொரோனா விழிப்புணர்வு பொம்மைகளும், பாடகர் எஸ்.பி.பி யை நினைவு படுத்தும் விதமாகவும் கொலு வைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு நவராத்திரி திருவிழா, தொடங்கி உள்ள நிலையில், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவர். சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த நந்தினி 10-வது ஆண்டாக கொலு வைத்துள்ளார்.

வீட்டிலுள்ள தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் கொலு பொம்மைகளை வைத்து அழகுபடுத்தியுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு கொலு பொம்மைகள் என ஆராயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் இங்கு அழகுற வைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு ஆண்டும் டிரென்டிற்கு ஏற்ப புதிய கொலு பொம்மைகளை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் செய்து வாங்குவது இவரது வழக்கம். இந்தாண்டு உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு செட் வைத்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சத்தான உணவு முறைகளை பின்பற்றுதல், சுகாதார விழிப்புணர்வு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை போன்றவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரியாதை செலுத்தும் வகையில் கோலமிட்டு கொலு இடம்பெற்றுள்ளது.Also read... Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

இவரது வீட்டில் வைக்கப்படும் கொலுவை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிடும் நிலையில், இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக நேரில் வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நவராத்திரி விழாவில் கொரோனா என்னும் தீமை ஒழிய வேண்டும் என்ற வழிபாட்டுடன் இந்தாண்டு கொலு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading