டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட்

டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட்
  • News18
  • Last Updated: February 15, 2020, 8:47 AM IST
  • Share this:
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பறிப்பதாக டிராஃபிக் ராமசாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ பதிவு வெளியானது.

இதைத் தொடர்ந்து, டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், அவர் ஆஜராகாததால் கடந்த 2016ஆம் ஆண்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செல்வகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிராஃபிக் ராமசாமிக்கு எதிரான பிடிவாரண்ட் காலாவதியாகி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வகையில் புதிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Also see:

First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading