• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வன்முறையை தூண்ட இது டெல்லி அல்ல; பெரியார் மண்...! வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் கி.வீரமணி பேச்சு

வன்முறையை தூண்ட இது டெல்லி அல்ல; பெரியார் மண்...! வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் கி.வீரமணி பேச்சு

  • News18
  • Last Updated :
  • Share this:
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இன்று 16வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், "அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆட்சியர்கள் நடந்து கொள்கிறார்கள். அரசியல் சட்டத்தை, ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் இது. போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். யார் அரசியல் சட்டத்தை மீறி கொண்டு வந்தார்களோ, மோடி அரசிற்கு ஓட்டுப் போட்டவர்களோ அவர்கள் தான் இந்த போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள்."

"மதச்சார்பின்மை என்ற அடிகட்டமைப்பை அழிக்க நினைப்பது தான் CAA, NRC, NPR என்ற மூன்று சட்டம். யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என சொல்பவர்கள், இந்த சட்டத்தை முழுமையாக படிக்கவில்லை. குடியுரிமை மத அடிப்படையில் இதுவரை அமைக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கொரோனா வைரஸை விட இந்த மூன்று சட்டம் அபாயமானது.

பல தலைமுறையை அழிக்கக்கூடியது. இது மதப்பிரச்சனை அல்ல; மனித உரிமைப் பிரச்சினை. அனைவரும் பிரிக்க முடியாத சகோதரர்கள். மண்ணின் மைந்தர்கள். இதை உணராதவர்கள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் விழுவார்கள்"

டெல்லியை போல் தமிழகத்தில் வன்முறை நடக்கும் என எச்சரிக்கிறார்கள். இது டெல்லி அல்ல; பெரியார் மண் என்ற பதிலை அவர்களுக்கு சொல்கிறேன். பெண்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள்; நீதி கிடைக்கும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: