ரூ.3000 பணம் கொடுக்காததால் அஞ்சப்பர் ஓட்டல் ஊழியர் தற்கொலை!

உதயசங்கரின் தற்கொலை தொடர்பாக அஞ்சப்பர் ஓட்டல் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் விளக்கமளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.  என்ன நடந்தது என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Web Desk | news18
Updated: July 6, 2019, 8:17 PM IST
ரூ.3000 பணம் கொடுக்காததால் அஞ்சப்பர் ஓட்டல் ஊழியர் தற்கொலை!
அஞ்சப்பர் ஹோட்டல்
Web Desk | news18
Updated: July 6, 2019, 8:17 PM IST
ஊதியம் கேட்டு தீக்குளித்த அஞ்சப்பர் ஓட்டல் ஊழியர் உதயசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 மாதத்திற்கு முன்பு திருமணமான நிலையில் உதயசங்கர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் அமெரிக்கா, லண்டன், துபாய் என உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது பிரபல செட்டிநாடு அசைவ ஓட்டல் அஞ்சப்பர். இந்த ஓட்டல்களில் ஏராளமான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலில் தருமபுரியைச் சேர்ந்த உதய சங்கர் என்ற 25 வயது இளைஞர் வேலை செய்து வந்தார்.

அதே ஓட்டலில் வேலை செய்து வந்த உதயசங்கரின் உறவினர் அஜித், ஓட்டலில் இருந்த பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அஜித்தை வேலைக்கு சேர்த்துவிட்ட உதயசங்கரை, அந்தப் பணத்தைக் கட்டும்படி ஓட்டல் நிர்வாகம் தரப்பில் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உதயசங்கருக்கு 2 மாதமாக சம்பளத்தையும் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மாதத்திற்கு முன்பு திவ்யா என்பவருடன் திருமணமான நிலையில், ஊதியம் இல்லாமல் உதயசங்கர் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் தலைமையகத்திற்கு நேற்று மாலை சென்ற உதயசங்கர் ஊதியம் கேட்டுள்ளார். அங்கிருந்த பணியாளர்கள் ஓட்டல் உரிமையாளர் அல்லது மேற்பார்வையாளர் அனுமதி இல்லாமல் பணத்தைத் தர முடியாது என மறுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த உதயசங்கர் ஓட்டல் வாசலிலேயே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து உதயசங்கரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

96 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த உதயசங்கர் சிகிச்சைப் பலனின்றி இரவு உயிரிழந்தார்.

உதயசங்கரின் தற்கொலை தொடர்பாக அஞ்சப்பர் ஓட்டல் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் விளக்கமளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.  என்ன நடந்தது என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Also Watch: ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து ரூ.40 ஆயிரத்தை இழந்த கல்லூரி மாணவி!

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...