தண்ணீர் பஞ்சம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை!

புலி, சிறுத்தை, கரடி, முதலைகள் என பல வகையான விலங்குகளுக்கும் அவற்றிற்கான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் பூங்கா ஊழியர்கள் தண்ணீர் நிரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் பஞ்சம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை!
வண்டலூர் உயிரியல் பூங்கா. (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
கோடை வெயிலில் தண்ணீர் தட்டுப்பாடால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. சென்னை வண்டலூர் பூங்காவில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி விலங்குகளின் உடலையும், தாகத்தையும் குளிர்வித்து வருகின்றனர்.

மனிதர்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளையும் விட்டுவைக்கவில்லை.

பூங்காவில் உள்ள 10 கிணறுகளில் சில கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், தண்ணீரை பார்த்து பார்த்து சிக்கனமாய், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். போதிய தண்ணீரை வழங்க முடியாத சூழலில் இருக்கும் பூங்கா நிர்வாகம், வாயில்லா ஜீவராசிகளை வாட்டி வதைக்கும் வெயிலுக்கு தண்ணீரை மட்டுமே நம்பியிருக்காமல் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை கொடுத்து வருகிறது.


Vandalur Zoo, வண்டலூர் உயிரியல் பூங்கா,
வண்டலூர் உயிரியல் பூங்கா


தண்ணீர் பற்றாக்குறையால் மற்ற விலங்குகளுக்கு ஷவர் அமைக்க முடியாத நிலையில், மனிதக்குரங்கிற்கு மட்டும் ஷவர் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

புலி, சிறுத்தை, கரடி, முதலைகள் என பல வகையான விலங்குகளுக்கும் அவற்றிற்கான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் பூங்கா ஊழியர்கள் தண்ணீர் நிரப்பியுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளில் தண்ணீர் வற்றியிருந்தாலும், விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் இதுவரை ஏற்படவில்லை என பூங்கா நிர்வாகம் கூறுகிறது.Also see... ஒரே ஒரு அடிகுழாயை நம்பி இருக்கும் செஞ்சி பகுதி மக்கள்... 2 குடம் தண்ணீருக்கு ஒரு வாரம் காத்திருக்கும் அவலம்...!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading