Home /News /tamil-nadu /

சூது கவ்வும் பட பாணியில் கடத்தல் நாடகம் - போலீசிடம் வசமாக சிக்கிய போதை ஆசாமிகள்

சூது கவ்வும் பட பாணியில் கடத்தல் நாடகம் - போலீசிடம் வசமாக சிக்கிய போதை ஆசாமிகள்

சென்னை கடத்தல் நாடகம்

சென்னை கடத்தல் நாடகம்

ஒரு குறிப்பிட்ட செல்போனிலிருந்து கடத்தப்பட்ட நபரின் கைகள் கட்டப்பட்ட இரண்டு புகைப்படங்கள் மெசேஜ் மூலம் வந்துள்ளது.

  சூது கவ்வும் பட பாணியில் சென்னை அம்பத்தூரில் ரூ.10 லட்சம் பணம் பறிக்க கடத்தல் நாடகம் போட்ட  2 பேரும் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

  சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (68). இவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த 30 வருடமாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது ஒரே மகன் ஹைதராபாத்தில் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

  இந்நிலையில் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவரது மனைவியின் தங்கை மகன் சண்முகம் என்பவர் கடந்த 2 வருடமாக இவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேஸ்வரனுக்கு  செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் உறவுக்கார நபர் சண்முகத்தை கடத்தி வந்துள்ளோம். தற்போது மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்துள்ளோம். 10 லட்சம் கொடுத்தால் அவரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

  Also Read : மதுரையில் காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை! குடிபழக்கத்தால் உயிரிழப்பா?

  காட்டிக்கொடுத்த செல்போன் டவர்

  இதற்கிடையில், அன்று மாலை சண்முகத்தின் தந்தை ராமசாமியின் செல்போனுக்கு ஒரு குறிப்பிட்ட செல்போனிலிருந்து கடத்தப்பட்ட சண்முகத்தின் கைகள் கட்டப்பட்ட இரண்டு புகைப்படங்கள் வந்தது.
  இதுகுறித்து ராஜேஸ்வரன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் அவசர புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் மர்ம நபர் செல்போன் எண்ணை வைத்து அம்பத்தூர் தனிபடை போலீசார் வண்டலூரில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர்.
  அங்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சண்முகமும் மற்றொரு நபரும் மது பாட்டில்களுடன் குடி போதையில் படுத்திருந்தது தெரியவந்தது.

  இருவரையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
  விசாரணையில் ராஜேஸ்வரன் மகன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் அவருக்கு 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கடந்த 1வாரத்திற்கு முன்பு வந்துள்ளது. அந்த பணத்தை அபகரிக்க சண்முகம் தனது நண்பர் ரவி என்பவருடன் கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   

  போலீஸார் விசாரணையில் கடத்தல் நாடகம் அம்பலம்

  ராஜேஸ்வரன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து அம்பத்தூர் காவல் துணைஆணையர் மகேஷ் குமார்,  உதவி ஆணையர் கனகராஜ்  தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சண்முகத்தின் செல்போன் டவர் மூலமாக  இருப்பிடம் தொடர்பாக  தீவிர விசாரணை நடத்தினர். அதில், செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ரவி (35) என்பவர் வீட்டில் சண்முகத்தை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

  Also Read:பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்ற மகளின் கைகளை பொசுக்கிய சைக்கோ தாய்.. ஆத்திரத்தில் வெறிச்செயல்!

  இதனையடுத்து தனிப்படை போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். பின்னர், வீட்டில் அடைத்து வைத்திருந்த சண்முகத்தை போலீசார் மீட்டனர்.  மேலும், அவருடன் இருந்த ரவி என்பவரையும் போலீசார் பிடித்து அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
  அதில், கடத்தப்பட்ட சண்முகத்துடன் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வருபவர் ரவி (35). இவரிடம்,  தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும், என்னை கடத்தி குடும்பத்தாரிடம் நாடகமாடினால் பணத்தை பறிக்கலாம் என சண்முகம் திட்டம்போட்டதாக கூறியுள்ளார்.

  மேலும், கடத்தல் நாடகத்தின் போது ரூ.10லட்சம் பணம் கேட்டு மிரட்டலாம். அப்போது அவர்கள் கொடுக்கும் பணத்தில்  உனக்கு 5 லட்சம் எனக்கு5 லட்சம் பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரவி சண்முகத்தை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவரது வீட்டில் அடைத்து வைத்து கடத்தல் நாடகமாடி உள்ளார் என்பது தெரியவந்தது.
  இதனையடுத்து போலீசார் சண்முகம், ரவி இருவரையும்  கைது செய்து அம்பத்தூர் மேஜிஸ்ட்ரேட் தனஞ்செழியன் அவர்களிடம் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: கன்னியப்பன் ( அம்பத்தூர்)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai Police, Crime | குற்றச் செய்திகள், Mobile phone, Money, Smuggling

  அடுத்த செய்தி