• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை ரத்து..!

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை ரத்து..!

Chennai Airport

Chennai Airport

சென்னைக்கு மழையால் இருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இன்று மதியம் முதல் மாலை 6 மணி வரை, சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தற்காலிகமாக ரத்து

  • Share this:
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதி தீவிர மழைப் பொழிவு இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதற்கேற்றார் போல நேற்று இரவு தொடங்கி கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Also read:  வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே திறக்கப்படும் அபூர்வ கோவில்.. விநோத வேண்டுதல்களுடன் உண்டியலில் கிடந்த கடிதங்கள்…

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர தமிழக கடற்கரை பகுதியில் சென்னை அருகே கடந்து செல்லும். இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் காற்று 40-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறுக்கு காற்று (Cross Winds) பலமாக வீசுவதாலும், சென்னைக்கு மழையால் இருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும் இன்று மதியம் முதல் மாலை 6 மணி வரை, சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also read:  ரூ.4.99 லட்சத்தில் அடுத்த தலைமுறை மாருதி செலரியோ.. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் அறிமுகம்

இன்று மதியம் 1.15 மணி தொடங்கி மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் விமானங்கள் இங்கிருந்து புறப்படுவதில் எந்த பாதிப்பும் இல்லை எனவும், விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: