நேற்று ஆட்டம், பாட்டம் என களைகட்டிய அதிமுக செயற்குழு: 300 பேரை வரவேற்க 3000 பேர் கூடியதால் நெரிசல்..

கொரோனா பேரிடர் காலத்திலும் அதிமுக செயற்குழு கூட்டம் உற்சாகத்திற்கு பஞ்சமின்றி கோலாகலமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 9:20 AM IST
  • Share this:
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த 300 பேரை வரவேற்க 3000 பேர் குவிந்ததால், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை ஸ்தம்பித்து போனது. செண்டை மேளங்கள் முழங்க குத்தாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம் என கட்சி அலுவலகம் களைகட்டியது. தலைமை அலுவலகம் வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, வெள்ளி வாள், ஆளுயர மாலை, கும்ப மரியாதை என தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுமட்டுமின்றி, ஓ.பி.எஸ் உருவம் பொறித்த முகமூடியை அணிந்து வந்த அவரது ஆதரவாளர்கள், மும்முறை முதல்வரே, அம்மாவின் அரசியல் வாரிசே, அமைதிப்படையே என புகழ்ந்தனர்.

ஒருபுறம் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு இப்படி உற்சாக வரவேற்பு அளிக்க, அவருடன் வந்த அவரது மகனும், எம்.பி-யுமான ரவீந்திரநாத் பின்னால் தனியாக நின்றுக் கொண்டிருந்தார். மறுபுறம் அங்கு வந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற கட்சி தொண்டர்கள், நிரந்தர முதல்வரே, மக்கள் முதல்வரே என்ற கோஷத்தை எழுப்பினர்.செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என முடிவு செய்யாமலேயே முடிவடைந்த நிலையில், அதுபற்றி குத்தாட்டம் போட்ட அதிமுக மகளிரணியிடம் நமது செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்தவர்காள், நாங்க எல்லோரும் ஒத்துமையாத்தான் இருப்போம், நீங்க கிளம்புங்க என்று பதிலளித்து தெறிக்கவிட்டனர்.

மேலும் படிக்க.. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்: அதிமுக செயற்குழுவில் காரசார விவாதம்.. அக்.7-ஆம் தேதி அறிவிப்பு.. கே.பி.முனுசாமி தகவல்

இறுதியாக ஆட்டம், பாட்டம் என களைத்துப் போன கட்சி தொண்டர்கள், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவை சுவைத்த சந்தோஷத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, வரும் ஏழாம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களே இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா ஆகியோர் கூறியுள்ளனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading