அமித்ஷா வருகை.. மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை
அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நவ.20-ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகம்
- News18 Tamil
- Last Updated: November 18, 2020, 8:02 AM IST
சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு மத்தியில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், பாஜக, அதிமுக இடையேயான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், இரு கட்சிகளும் தங்கள் பலத்தை காட்ட வெவ்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பாஜகவின் வேல் யாத்திரையை ஆளும் அதிமுக அரசு முடக்க தடை விதிப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. சட்டத்திற்கு முன் எல்லோரும் ஒன்றுதான், இங்கு மத அரசியலை கொண்டு மக்களை பிளவுப்படுத்த முடியாது என்கிற ரீதியில் அதிமுக தரப்பும் பேசி வருகிறது. வரும் சனிக்கிழமை தமிழகத்திற்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுக உடனான கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், கூட்டணி தலைவர்களையும் சந்திக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அமித்ஷா வருகைக்கு ஒருநாள் முன்னர் வெள்ளிக்கிழமை, அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு விடை காணப்பட்டு விட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த அக்கட்சி நிர்வாகிகளை அழைத்துள்ளது. வரும் வெள்ளியன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டணி குறித்தும் விவாதிக்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக நிலைப்பாடு குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த வார கடைசி தமிழக அரசியலில் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
துலாம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
விருச்சகம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
தனுசு - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
12 ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
அடுத்த ஆண்டு மத்தியில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், பாஜக, அதிமுக இடையேயான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், இரு கட்சிகளும் தங்கள் பலத்தை காட்ட வெவ்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பாஜகவின் வேல் யாத்திரையை ஆளும் அதிமுக அரசு முடக்க தடை விதிப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. சட்டத்திற்கு முன் எல்லோரும் ஒன்றுதான், இங்கு மத அரசியலை கொண்டு மக்களை பிளவுப்படுத்த முடியாது என்கிற ரீதியில் அதிமுக தரப்பும் பேசி வருகிறது.