10 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா சாலையின் இருவழியிலும் வாகனங்கள் அனுமதி!

”இதற்கான சோதனை போக்குவரத்து ஓட்டம் இன்று நடக்க இருக்கிறது. நாளை முதல் இரு வழியிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.”

news18
Updated: August 2, 2019, 11:20 AM IST
10 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா சாலையின் இருவழியிலும் வாகனங்கள் அனுமதி!
அண்ணா சாலை (கோப்புப்படம்)
news18
Updated: August 2, 2019, 11:20 AM IST
மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட அண்ணா சாலையின், சில பகுதிகள் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான சோதனை போக்குவரத்து ஓட்டம் இன்று நடக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை வழித்தடம் அமைப்பதற்கான பணி 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதனால் அண்ணா சாலை பகுதியில், மெட்ரோ ரயில் சுரங்கம் அமைப்பதற்காக எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் சாலை மூடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணா சாலையை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது.


இதனால் அண்ணா சாலை வழியாக செல்ல வேண்டியவர்கள் அதிக தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர்பாதை மட்டும் ஒரு வழிசாலையாக இயங்கி வந்தது.

தற்போது, அண்ணா சாலை பகுதியில் மெட்ரோ சுரங்கம் அமைக்கும் பணி முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை சீரமைப்பு பணிகளும் முடிவடைந்த நிலையில், மீண்டும் இருவழிப்போக்குவரத்து கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலையில் மீண்டும் இரு வழியிலும் போக்குவரத்து கொண்டு வரப்பட இருந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகளில் தடுப்புகள் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளது.

Loading...

இதற்கான சோதனை போக்குவரத்து ஓட்டம் இன்று நடக்க இருக்கிறது. நாளை முதல் இரு வழியிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...