சென்னையில் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பெண்.. வைரல் வீடியோவின் பின்னணி

போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண்

வழக்கறிஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
முகக்கவசம் அணியாமல் சென்ற தனது மகளுக்கு போலீசார் அபராதம் விதித்ததால் பெண் வழக்கறிஞர் ஒருவர் போலீசாரை கடுமையாக பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நான் அட்வகேட்.. மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன்.. என பெண் ஒருவர் சென்னையில் ஊரடங்கு பணிகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Also Read: ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு முழிக்கிறதை பாரு..’- பிடிஆர் போஸ்டும் ட்விட்டர்வாசிகளின் ரியாக்‌ஷனும்

சேத்துபட்டு சிக்னலில் சென்னை போக்குவரத்து காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் வழிமறித்துள்ளனர். காரில் இருந்த பெண் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதன்காரணமாக ரூ.500 அபராதம் விதிக்கவுள்ளதாக போக்குவரத்து போலீஸார் அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்தப்பெண் தனது அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். விலையுயர்ந்த காரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்தப்பெண்ணின் தாயார் அங்கு நடந்தவற்றை எதுவும் விசாரிக்காமல் போக்குவரத்து போலீஸாரை நோக்கி கடுமையான வார்த்தைகளால் பேசத்தொடங்கினார். தான் ஒரு வழக்கறிஞர் என்னால் அபராதம் கட்ட இயலாது என போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.

Also Read: ‘நான் அட்வகேட்.. மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன்’ - சென்னையில் போக்குவரத்து காவலரை மிரட்டிய பெண்

மாஸ்க் அணிந்து பேசுமாறு அந்தப்பெண்ணை போலீஸார் அறிவுறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அந்த பெண் மாஸ்க் அணியமுடியாது. நான் யார்ன்னு காட்டுறேன். யூனிபார்ம் கழட்டுறேன் பாக்குறியா என போலீஸாரை நோக்கி ஒருமையில் பேசத்தொடங்கினார். இதனால் காரின் நம்பரை வைத்து முகக்கவசம் அணியாதற்காக போலீசார் அபராதம் விதித்தனர்.

வழக்கறிஞர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் வழக்கறிஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: