சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது

தனது அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய புகாரில், நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்

சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது
நடிகர் ஷாம்
  • News18
  • Last Updated: July 28, 2020, 7:40 AM IST
  • Share this:
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்றிரவு போலீசார் அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்து சோதனை செய்த போது, நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன.

தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.

படிக்க: இணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் காட்டம்

படிக்க: மீண்டும் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்கும் ஆல்யா மானசா

படிக்க: முருகனுக்கு ஒரு நியாயம்? வள்ளிக்கு ஒரு நியாயமா? மதுரை ஆட்சியரிடம் புகார்

ஏற்கனவே காவல்துறைக்கு இந்த சட்டவிரோத சூதாட்டம் குறித்த  தகவல் தெரிந்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டும் உள்ளது. கைது செய்யபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரும் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்யபட்டனர்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading