• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேட்ட, விஸ்வாசம் தான் கடைசியா?... மூடப்படும் அபிராமி மெகா மால்

பேட்ட, விஸ்வாசம் தான் கடைசியா?... மூடப்படும் அபிராமி மெகா மால்

சென்னையில் உள்ள அபிராமி மெகா மால் வரும் பிப்ரவரி 1-ம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் உள்ள அபிராமி மெகா மால் வரும் பிப்ரவரி 1-ம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அபிராமி மெகா மால் பிப்ரவரி 1-ம் தேதியோடு மூடப்பட்டு புதுப்பொலிவுடன் 2ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அபிராமி மெகா மால் கடந்த 2002-ம் ஆண்டு திறக்கப்பட்டது, மேலும் 2005-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் 1000 இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் என்பது சரியாக இருக்காது என்ற காரணத்தால் மால்-ஐ புதிதாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிப்ரவரி 1ஆம் தேதியுடன் மால்-ஐ மூடிவிட்டு 2 ஆண்டுகளுக்குள் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்குள் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்படும் அபிராமி மெகா மால்


மேலும் அபிராமி மெகா மாலில், உலகத்தரம் வாய்ந்த திரையரங்கள் அமைக்கப்படவுள்ளது. முதல் மூன்று மாடிகளில் தியேட்டர், கடைகள், உணவு விடுதிகள், அடுத்த 14 மாடிகளில் குடியிருப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த மாலில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வெளியில் எங்கும் செல்லாமல் இங்கேயே வாங்கும் வகையில் மால் அமைக்கப்படவுள்ளது என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:  காங்.-திமுகவை விட பலமான கூட்டணியை பாஜக அமைக்கும் -தமிழிசை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: