• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் நடனம், நாடகங்கள் மூலம் மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள்..

சென்னையில் நடனம், நாடகங்கள் மூலம் மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள்..

சென்னை மயிலாப்பூரில் கானா பாடலுக்கு நடனம் மற்றும் நாடகங்கள் மூலம் திருநங்கைகள் அமைப்பினர் மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 

  • Share this:
சென்னை மயிலாப்பூரில் கானா பாடலுக்கு நடனம் மற்றும் நாடகங்கள் மூலம் திருநங்கைகள் அமைப்பினர் மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 

சென்னையில் கொரனோ வைரஸ் பரவ துவங்கியது முதல் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து பல்வேறு திருநங்கைகள் அமைப்பினர் கொரனோ விழிப்புணர்வினை மக்களிடம் நேரடியாக சென்று ஆடல் , பாடல் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் மயிலாப்பூரிலுள்ள பிள்ளையார் கோவில் தோட்டம் சாரதாபுரம் ,உள்ளிட்ட இடங்களில் பார்ன் டூ வின் (Born to Win) திருநங்கைகள் அமைப்பினர் (சாதிக்க பிறந்தவர்கள்) கொரோனா விழுப்புணர்வு நாடகம் நடத்தினர்.

Also read... புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவளித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்; பாஜகவுக்கு செல்லவில்லை - நடிகை குஷ்பு விளக்கம்



கானா பாடலுக்கு நடனம், விழிப்புணர்வு நாடகம் மூலம் முகக்கவசம் , தனிமனித இடைவெளி , அச்சம் தவீர் , கபசுர குடிநீர் அருந்துதல் , அரசுக்கு முழு ஒத்துழைப்பு என்கின்ற வாசகம் பதாகைகளை ஏந்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: