சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகரில் தற்காலிக காய்கறி அங்காடியை மூடியது மாநகராட்சி!

இட நெருக்கடி அதிகமாக இருந்ததால் இந்த வெங்கடநாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை காய்கறி அங்காடி சென்னை மாநகராட்சி மாற்றியது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகரில் தற்காலிக காய்கறி அங்காடியை மூடியது மாநகராட்சி!
விளையாட்டு மைதானம்
  • Share this:
சமூக இடைவெளியைச் சரியாக கடைபிடிக்காததால் தியாகராய நகரில் தற்காலிக காய்கறி அங்காடியாக அமைக்கப்பட்ட மாநகராட்சி மைதானம் மூடப்பட்டது.

கொரோனா நோய் தொற்று காரணமாக தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள பெருநகர் சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காய்கறி அங்காடியாக மாற்றி தரப்பட்டது.

மேற்கண்ட மைதானத்தை பொதுமக்கள் மற்றும் காய்கறி அங்காடி அமைத்து உள்ளவர்கள் கொரோனா‌ நோய் தொற்று தவிர்ப்பது தொடர்பான சமுதாய இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை காவல்துறை தி.நகர் சரகம் இணைந்து இந்த மைதானத்தை பூட்டியது.


ஏற்கனவே மாம்பலம் ரயில் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் போடப்பட்டிருந்தது. அங்கு இட நெருக்கடி அதிகமாக இருந்ததால் இந்த வெங்கடநாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை காய்கறி அங்காடி சென்னை மாநகராட்சி மாற்றியது.

தற்போது பொதுமக்கள் மற்றும் காய்கறி அங்காடி அமைத்து உள்ளவர்கள் சமூக இடைவெளியை சரியாக கடைப்பிடிப்பதற்கு ஒத்துழைப்பு தராததால் தற்போது இங்கு எந்த காய்கறி கடைகளும் இயங்கவில்லை.

Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading