காதல் கணவர் பிரிந்து சென்றதால் திருமணமான 24வது நாளில் இளம்பெண் தற்கொலை

  • Share this:
சென்னை அருகே காதல் கணவர் பிரிந்து சென்றதால், திருமணமான 24வது நாளில் 24 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சிஆர்பிஎஃப் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் 62 வயதான ராஜா. ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் மருத்துவ அலுவலரான அவரது மகள் 24 வயதான ராதா. ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பாலாஜியை பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஒரு மாதத்திற்கு முன் ராதா திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி 20 நாட்கள் ஆன நிலையில், ராதா திங்கட்கிழமை மாலை ஆவடியில் உள்ள தந்தை வீட்டில் யாருமில்லாத நேரத்தில், துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கப்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ராதாவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


விசாரணையில், பாலாஜி-ராதாவின் திருமணத்தை ஏற்றுக்கொண்ட பாலாஜியின் தந்தை, தனது மகள் திருமணம் முடிந்த பிறகு இரு வீட்டார் சம்மதம் பெற்று முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.

இதனால் மகளுக்கு திருமணம் ஆகும் வரை ராதாவை அவரது தந்தை வீட்டில் இருக்கும்படி வலியுறுத்தி உள்ளார். இதை அடுத்து ஆவடியில் உள்ள தந்தை வீட்டிற்கு ராதா சென்றுள்ளார். இந்நிலையில், ராதாவிடம் பாலாஜி போன் பேசுவதை ஒரு சில நாட்களாக தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ராதா கடந்த 15ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பாலாஜியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று சோர்வுடன் காணப்பட்ட அவர் திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 
First published: November 20, 2019, 3:00 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading