Home /News /tamil-nadu /

சென்னை விமான நிலைய சரக்கு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு சோதனை... முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்

சென்னை விமான நிலைய சரக்கு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு சோதனை... முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்

Youtube Video

சென்னை விமான நிலையத்தில் சரக்கு பிரிவு அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை விமான நிலையத்தில் சரக்கு பிரிவு அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நேற்றிரவு 11.40 மணியளவில் சரக்கு பிரிவு அலுவலகத்துக்கு சென்ற 8 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர், அதிகாலை 4.30 மணி வரை சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சரக்கு விமானங்களில் பொருட்களை அனுப்பும் போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க...திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்.. குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு.

    மேலும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai Airport

    அடுத்த செய்தி