ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படலாம் - வல்லுநர் குழு எச்சரிக்கை

மாதிரிப் படம்

சளி தொந்தரவோ, காய்ச்சலோ இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அணுப்ப வேண்டாம் எனவும் மருத்துவர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2021-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவரும் தொற்றுநோய் சிறப்பு மருத்துவருமான ராமசுப்பிரமணியன் நியூஸ் 18 தமிழ்நாட்டு செய்திக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், மருத்துவக் குழு கணிதப்படி தான் கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் உள்ளது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் தீவிரமாக தான் கொரோனா உள்ளது. செப்டம்பர் மாதம் குறையும் என்று எதிர்பாத்தது தவறாக உள்ளது. இந்த மாதம் தான் கொரோனா தமிழகத்தில் குறைய தொடங்கியுள்ளது. அதனால் இன்னும் மூன்று மாதகாலம் ஆகலாம் என்று தெரிவித்தார்.மேலும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இரண்டாவது அலை ஏற்படலாம் என்றும் 2021 ஆண்டு மத்தியில் தான் இந்தியா முழுவதும் கொரோனா குறைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு தொற்று கண்டுப்பித்தால் அதன் பின் ஐந்து தொற்றாளர்கள் உள்ளார்கள் என்று கணக்கிடலாம். இளைஞர்களுக்கு பரவிய கொரோனா தற்போது முதியவர்களுக்கு பரவ தொடங்கியுள்ளது. தொற்று குறைந்தாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா நம்மை விட்டுச் சென்று விட்டதாக மக்கள் என்ன கூடாது. சில இளைஞர்கள் விழிப்புணர்வோடு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஊரடங்கு, முககவசம் அணிவதை முன்னதாக கொண்டு வந்ததால் தான் நல்ல பலனை கொடுத்துள்ளது.
கொரோனா வீரியம் குறையாது மாற்றம் அடைந்து தீவிரம் அடைய தான் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.Also read... தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி விகிதம் 10% கீழ் குறைந்தது

தொடர்ந்து, சளி தொந்தரவோ, காய்ச்சலோ இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அணுப்ப வேண்டாம் எனவும்
குழந்தைகளுக்கு கொரோனா தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று தெரிவித்தார்.

கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைத்தாலும் மக்களை சென்றடைய ஒரு வருடம் ஆகலாம். தடுப்பூசி கிடைத்தாலும் 70% மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். பிறநோயாளிகள் மருத்துவமனைக்கு வராமல் அச்சப்பட்டு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: