விமான ஓடுதளங்களை சரியாக பராமரிக்காத சென்னை ஏர்போர்ட்டுக்கு நோட்டீஸ்!

சென்னை மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அகமதாபாத் விமான நிலையங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும் பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

Web Desk | news18
Updated: July 10, 2019, 12:35 PM IST
விமான ஓடுதளங்களை சரியாக பராமரிக்காத சென்னை ஏர்போர்ட்டுக்கு நோட்டீஸ்!
FILE
Web Desk | news18
Updated: July 10, 2019, 12:35 PM IST
விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விளக்களிக்குமாறு சென்னை விமான நிலைய இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கடந்த வாரம் ஆய்வு நடத்தியது.

அப்போது, சென்னை மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அகமதாபாத் விமான நிலையங்களில், ஓடுதளம் உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும் பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

கடந்த வாரம் மழைக்காலத்தில் விமானங்களையும் இயக்கும்போது 6 விபத்துகள் நேரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி மற்றும் அகமதாபாத் விமான நிலைய இயக்குனர், மனோஜ் கங்கல் ஆகியோருக்கு, விமான போக்குவரத்து துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...