ஹவுசிங் போர்டில் குறைந்தவிலையில் வீடு வாங்கித் தருவதாக பணமோசடி - தாய், மகன் கைது

வீடு ஒதுக்கியதற்கான ஆவணங்கள் கிடைத்தும் வீடு கிடைக்காத மக்கள் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். ஆவணங்களை சரி பார்த்த அதிகாரிகள் அது போலியானது என கூறியுள்ளனர்.

news18
Updated: July 10, 2019, 12:59 PM IST
ஹவுசிங் போர்டில் குறைந்தவிலையில் வீடு வாங்கித் தருவதாக பணமோசடி - தாய், மகன் கைது
மரியா பாத்திமா மற்றும் அவருடைய மகன் ராபர்ட் அமல்ராஜ்
news18
Updated: July 10, 2019, 12:59 PM IST
சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குறைந்த விலையில் வீடுகள் வாங்கித்தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிசை வீடு மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களை குறிவைத்து, அவர்களிடம் சென்று பெரும்பாக்கத்தில் புதிதாக தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை குறைந்த தொகையில் வாங்கித்தருவதாக செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சித்ரா என்ற மரியா பாத்திமா, அவருடைய மகன் ராபர்ட் அமல்ராஜ் ஆகியோர் சுமார் 30,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 5 வருடங்களாக பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வீடுகளை தராமல் ஏமாற்றி வந்ததுடன், தங்கும் வீட்டையும் அடிக்கடி மாற்றி வந்துள்ளனர்.

வீடு கேட்டு தொந்தரவு செய்த ஒரு சிலருக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக அரசு முத்திரை உடன் கூடிய சான்றிதழ் மற்றும் வீட்டின் சாவி ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

வீடு ஒதுக்கியதற்கான ஆவணங்கள் கிடைத்தும் வீடு கிடைக்காத மக்கள் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். ஆவணங்களை சரி பார்த்த அதிகாரிகள் அது போலியானது என கூறியுள்ளனர்.

இதையடுத்து சித்ராவால் ஏமாற்றப்பட்டவர்களில் 57 பேர் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தாய்-மகனை தேடி வந்த போலீசார், கேளம்பாக்கம் அடுத்த படூரில் இருப்பதை கண்டறிந்தனர்.

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், 100-க்கும் மேற்பட்டோரிடம் வீடு வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...