சென்னை: மது அருந்தும்போது நண்பரை பாட்டிலால் அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடியவர் கைது..

கோப்புப் படம்

பம்மல் அருகே நண்பருடன் மது அருந்தியவரை சக நண்பரே மது பாட்டிலால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

  • Share this:
    சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அருள் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன் (60). இவர் சென்னை மிண்ட் பகுதியில் டிவி பழுது பார்க்கும் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வாசுதேவன் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் பிராட்வே பகுதியைச் சேர்ந்த கோபி (45) மற்றும் மணி (எ) மணிகண்டன் (45) இருவரையும் மது அருந்துவதற்கு தன்னுடைய வீட்டிற்கு வரவைத்துள்ளார்.

    மூன்று பேரும் வீட்டில் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மது போதையில் வந்த வாசுதேவனின் மகன் நவீன் (32) வீட்டினுள் எதற்கு மது அருந்துகிறீர்கள் என்று மூன்று பேரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    Also read: காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு.. முறையாக சிகிச்சையில்லை என செவிலியர் மீது உறவினர்கள் தாக்குதல்..

    இதனால் ஆத்திரமடைந்த கோபி, தன்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய் என்று கூறி அருகே இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரின் நண்பரான மணியின் தலையில் அடித்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இதையடுத்து கோபி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.



    அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலிசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வாசுதேவன் மற்றும் அவரது மகன் நவீன் இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கோபியைத் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைதுசெய்து, அவர் மீது வழக்குப் பதிவுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Published by:Rizwan
    First published: