• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மளிகைக் கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்... உடல் முழுதும் நீல நிறமானதால் அதிர்ச்சி!

மளிகைக் கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்... உடல் முழுதும் நீல நிறமானதால் அதிர்ச்சி!

சிறுமி  தரணி

சிறுமி தரணி

சிறுமியின் சகோதரி அஸ்வினி என்னவென்று கேட்க தன்னால் நிற்க முடியவில்லை என்றவாறே மயங்கி கீழே விழுந்ததாகவும், மேலும், சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளி வரவே பதறிய சகோதரி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.

  • Share this:
சென்னை பெசண்ட் நகர் ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் கல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை திருமணம் செய்து கல்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக காயத்ரி தனது இரண்டு மகள்களான தரணி (வயது 13) மற்றும் அஷ்வினி( வயது 16) ஆகியோருடன்  பெசன்ட் நகர் ஓடை குப்பம் பகுதியில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு வந்து பெசன்ட்நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் மொட்டையடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் காயத்ரி நேற்று காலை தனது இரண்டு மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். மாலை சதீஷ்-காயத்ரி தம்பதியினரின் இரண்டாவது மகளான தரணி வீட்டின் அருகில் இருந்த மளிகை கடையில் ரூ 10 மதிப்பு கொண்ட Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தரணிக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. அதைப்பார்த்த சிறுமியின் சகோதரி அஸ்வினி என்னவென்று கேட்க தன்னால் நிற்க முடியவில்லை என்றவாறே மயங்கி கீழே விழுந்ததாகவும், மேலும், சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளி வரவே பதறிய சகோதரி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.

Also Read: சாவில் இணைந்த காதலர்கள்.. காதல் ஜோடியின் திருமண கனவு கல்லறையில் நிறைவேறியது..

அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமியின் உடல் முழுவதும் நீலம் வண்ணம் படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்த்ரி நகர் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாஸ்த்ரி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி குடித்த குளிர்பானத்தின் சிறு அளவையும் ஆய்விற்கு உட்படுத்த அனுப்பியுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  இது வீடா இல்ல பேருந்தா? பார்வையாளர்களை குழப்பிய சிற்பி..

இந்நிலையில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையிலுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சிறுமி குடித்த குளிர்பானம் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவற்றின் விற்பனையை தடுத்து அவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது "மூச்சுக்குழலில் உணவுத்துகள்கள் இருந்ததாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக" சாஸ்திரிநகர் போலீசார் தெரிவித்தனர். மேலும், "சிறுமியின் உடலில் குளிர்பானத்தினால் விஷம் ஏறி இருக்கிறதா? என்பதை கண்டறிய சிறுமியின் உடல் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது எனவும் அதன் முடிவில் தான் சிறுமியின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும்" என சாஸ்திரிநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: