HOME»NEWS»TAMIL-NADU»chennai 97061 people leave chennai for deepavali yesterday vai vel

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 97,061 பேர் சொந்த ஊர் பயணம்..

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 97 ஆயிரத்து 61 பேர் தங்களது சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 97,061 பேர் சொந்த ஊர் பயணம்..
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 97,061 பேர் சொந்த ஊர் பயணம்
  • Share this:

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிப்பதற்காக, நேற்று இரவு 252 சிறப்பு பேருந்துகள் உள்பட 2252 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. இதில் 97,000-க்கும் மேலானோர் பயணித்த போதும், கடந்த ஆண்டை விட இது குறைவு எனக் கூறப்படுகிறது. அதே போன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4000 பேருந்துகள் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து இன்றும் நாளையும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 82,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ் ஆகிய மூன்று இடங்களில் 13 முன்பதிவு மையங்கள் இயங்கி வரும் நிலையில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் 130000க்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊர்க்கு பயணம் மேற்கொண்டனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 97061 பயணிகள் வெளியூர் பயணம் சென்றுள்ளனர்.



மேலும் படிக்க..

தமிழக கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி. 

.#BREAKING | நவம்பர் 16-ஆம் தேதிமுதல் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட அரசியல் கூட்டங்களுக்கான அனுமதி ரத்து..



இதேபோல் மதுரை கோவை திருச்சி நெல்லை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து 36,070 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்திற்கு பேருந்துகள் இயங்குவதால் மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published: