Home /News /tamil-nadu /

சென்னையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சா சிக்கியது: 4 பேர் கைது

சென்னையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சா சிக்கியது: 4 பேர் கைது

கஞ்சா

கஞ்சா

தனிப்படை குழுவினர் விசாகபட்டினம் சென்று அங்கேயே ஒரு வாரத்திற்கும் மேலாக இருந்து சென்னைக்கு  கொண்டு வரப்பட இருக்கும் கஞ்சாக்கள் பற்றிய   தகவல்களை அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் 96 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது.

    சென்னை  வண்ணாரப்பேட்டையில்  ரூ.30லட்சம் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்,கஞ்சா கடத்தல் தொடர்பாக  நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை பேருந்து நிலையம் அருகே விசாகப்பட்டிணத்தை சேர்ந்த நபர் கஞ்சாவை சென்னையிலுள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வருவதாக  வண்ணாரப்பேட்டை காவல் துணை  ஆணையருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் ரகசியமாக மேம்பாலம் அருகே கண்காணித்து வந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில்  செயல்படுவதாக கருதி 35 வயது மதிப்புடைய நபரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மங்கராஜ் என்பதும் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 26 கிலோ கஞ்சாவை  சென்னையில் உள்ள  மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வந்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் சென்னை காசிமேடு சேர்ந்த சரண்ராஜ் என்கின்ற சரண்குமார் ,  லட்சுமி என்கின்ற நொண்டி லட்சுமி,  மற்றும் திருவொற்றியூர் சேர்ந்த கவிதா  ஆகியோர்  மொத்த வியாபாரிகள் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் உடனடியாக மூன்று பேர் வீட்டில் சோதனை செய்தனர்.

    இதையும் படிங்க: மசாஜ் அறைகளில் கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது: நீதிமன்றம் கருத்து


    இந்த சோதனையில் சரண்ராஜின் வீட்டில் இருந்து 22 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே கொலை, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.  அதைப்போல  லட்சுமி வீட்டில் நடந்த சோதனையில் 24 கிலோ கஞ்சாவும்,  கவிதா வீட்டில் 24 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட இருபெண் மீது ஏற்கனவே சில கஞ்சா வழக்குகள் உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சென்னை மத்திய புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சிவபிரசாத் கூறுகையில்,  சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னையில் கஞ்சா விற்பணை செய்வது தடுக்கப்பட வேண்டும்  என்ற நோக்கத்தில்  வடசென்னை சரகத்தின் சார்பில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.பெரும்பாலான கஞ்சா, போதை பொருட்கள் ஆந்திரா, ஒடிசா, விசாகப்பட்டிணம் போன்ற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக தகவல் வந்தது.

    மேலும் படிக்க: கொரோனா அலெர்ட்.. ஒரே நாளில் 1003 பேருக்கு பாசிட்டிவ்.. 50% பேர் சென்னைவாசிகள்..


    இந்த தகவலின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரு தனிப்படை குழுவினர் விசாகபட்டினம் சென்று அங்கேயே ஒரு வாரத்திற்கும் மேலாக இருந்து சென்னைக்கு  கொண்டு வரப்பட இருக்கும் கஞ்சாக்கள் பற்றிய   தகவல்களை அனுப்பியுள்ளது. அந்த தகவலின் பேரிலேயே விசாகப்பட்டினத்தை சேர்ந்த  மங்கராஜ் என்பவர் 26 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். அந்த நபர் சென்னையின் எந்தெந்த பகுதிகளில்   யார் யாருக்கு  விற்பனை செய்கிறார் என்று விசாரித்ததின் பேரிலேயே மற்ற மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த நான்கு பேரிடம் பறிமுதல் செய்த 96 கிலோ கஞ்சா மதிப்பு 30லட்சம் எனவும் அவர்  தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai Police, Marijuana

    அடுத்த செய்தி